ரொனால்டோவுடன் போட்டியா?! எம்பாபே சுவாரஷ்ய பதில்!!
3 கார்த்திகை 2025 திங்கள் 08:15 | பார்வைகள் : 2247
கிறிஸ்டியானோ ரொனால்டோவுட்ன் போட்டியா என கேட்கப்பட்ட கேள்விக்கு பிரெஞ்சு வீரர் Kylian Mbappé சுவாரஷ்யான பதிலளித்துள்ளார்.
முதலாவது தங்க காலணி விருதினை பெற்றுக்கொண்ட எம்பாபே, ஊடக சந்திப்பில் கலந்துகொண்டார். Real Madrid அணியில் விளையாடும் Kylian Mbappé இடம், ஊடகத்தினர் ‘நீங்கள் ரொனால்டோவுக்கு போட்டி என கருதுகிறீர்களா..?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, “இல்லை. நீண்டகாலமாக விளையாடும் எவருக்கும் நான் போட்டியில்லை. ஒன்பது ஆண்டுகளாக Real Madrid அணிக்காக விளையாடிய ரொனால்டோவுடன் நான் எந்த விதத்திலும் போட்டியில்லை!” என தெரிவித்தார்.
62 போட்டிகளில்- 31 கோல்களை விளாசிய எம்பாப்பேயிடம், இந்த சாதனையை வைத்து ரொனால்டோவுடன் ஒப்பிட்டு கேள்வியை எழுப்பியிருந்தனர்.
“இதற்கு எவ்வாறு பதிலளிப்பது என எனக்கு தெரியவில்லை. மட்ரிட் அணியில் அடையாளம் அவர். அவர் என்றும் முதலாவது இடத்தில் இருக்கிறார். ஆனால் நான் ஒன்றரை வருடங்களாக தான் மட்ரிட்டில் விளையாடுகிறேன். அவர் பெற்ற உயரங்களோடு என்னை ஒப்பிட முடியாது. என்னுடைய வழி வேறு. நான் என்னுடைய இலக்குகளில் கவனம் செலுத்துகிறேன். கிரிஸ்டியானோ ரொனால்டோ ஏற்கனவே எங்களுடைய கெளரவமாக மாறியிருக்கிறார்.” என அவரை மிகவும் நெகிழ்ச்சியுடன் புகழ்ந்தார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan