Paristamil Navigation Paristamil advert login

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு: நீதிமன்ற உத்தரவு என்ன?

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு: நீதிமன்ற உத்தரவு என்ன?

30 புரட்டாசி 2025 செவ்வாய் 16:40 | பார்வைகள் : 208


இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது பள்ளி தோழியான சைந்தவியை 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 12 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் குடும்ப பிரச்சனையால் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இசையப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடா்பாக இருவரும் சேர்ந்து முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கியது. 6 மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோா் நேரில் ஆஜராகினர். தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அப்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்