Paristamil Navigation Paristamil advert login

'இட்லி கடை' படம் எப்படி இருக்கு?

'இட்லி கடை' படம் எப்படி இருக்கு?

30 புரட்டாசி 2025 செவ்வாய் 16:40 | பார்வைகள் : 192


நடிகர் தனுஷ், நடிப்பை தாண்டி அடுத்தடுத்து சில படங்களை இயக்கி வருகிறார். ஏற்கனவே, பா.பாண்டி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், மற்றும் இட்லி கடை என மொத்தம் 4 படங்களை இயக்கி உள்ளார். இதில் தனுஷ் இயக்கி கடைசியாக நடித்த 'ராயன்' திரைப்படம் சுமார் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. இதை தொடர்ந்து, தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தை, ஆகாஷ் பாஸ்கரனின் Dawn பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் Wunderbar பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. . கிரண் கௌஷிக் படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து, நித்தியா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அசோக் செல்வன், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே, அருண் விஜய், ராஜ்கிரண், ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'இட்லி கடை' திரைப்படம், உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய சிறு வயதில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை கொண்டே இந்த படத்தை இயக்கியதாக கூறியுள்ளார். எனவே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே போல் 'இட்லி கடை' திரைப்படம், மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட கதை என்பது போன்ற சில தகவல்கள் பரவியது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது 'இட்லி கடை' திரைப்படத்தின் முதல் விமர்சனம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 'இட்லி கடை' படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் சிலரும், சென்சார் குழுவை சேர்ந்தவர்களும் படம் சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே போல் இட்லி கடை படம் மாபெரும் வெற்றியை பெரும் என கூறுகிறார்கள். என்னதான் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மத்தியில் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், நாளைய தினம் ரசிகர்கள் மத்தியில் எப்படி பட்ட விமர்சனத்தை பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்