Paristamil Navigation Paristamil advert login

மதகஜராஜா பட கூட்டணியில் உருவாகும் புதிய படம்

மதகஜராஜா பட கூட்டணியில் உருவாகும் புதிய படம்

30 புரட்டாசி 2025 செவ்வாய் 16:40 | பார்வைகள் : 172


கடந்த ஜனவரி மாதம் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மதகஜராஜா’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், சந்தானம், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.

ஜெமினி ஃபிலிம் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க விஜய் ஆண்டனி இதற்கு இசையமைத்திருந்தார். கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படம் கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து வெளியான போதிலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர்

அதே சமயம் இந்த கூட்டணி மீண்டும் இணையப்போவதாகவும் தகவல் கசிந்தது. இதனை சுந்தர்.சி – விஷால் ஆகிய இருவருமே உறுதி செய்திருந்தனர். தற்போது விஷால் ‘மகுடம்’ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருவதாலும், சுந்தர்.சி ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருவதாலும் இந்த புதிய படம் தள்ளிப்போனது. 
 

இந்நிலையில் இது குறித்த லேட்டஸ்ட் தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது 2025 நவம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது அதுமட்டுமில்லாமல் ‘மதகஜராஜா’ படத்தை போல் சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்திற்கும் விஜய் ஆண்டனி தான் இசையமைக்கப் போகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்