விபத்தில் காயமடைந்த முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு

30 புரட்டாசி 2025 செவ்வாய் 13:07 | பார்வைகள் : 150
கடந்த வியாழக்கிழமை அன்று புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் வேன் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த நிலையில் அனுராதபுரம் - தலாவ, மீரிகம பகுதியில் வைத்து முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது .
இதில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, செம்மலை பகுதிகளை சேர்ந்த (புதுக்குடியிருப்பு தனியார் ஆடைக் தொழிற்சாலை) ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்திருந்தனர்.
அத்துடன் 9ம் வட்டாரம் மல்லிகைத்தீவு - புதுக்குடியிருப்பை சேர்ந்த நடராசா விஸ்னுயன் என்ற 21 வயதுடைய இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார்.
இவரோடு இந்த விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1