Paristamil Navigation Paristamil advert login

Évry-Courcouronnes : இளைஞன் அடித்துக்கொலை!!

Évry-Courcouronnes : இளைஞன் அடித்துக்கொலை!!

30 புரட்டாசி 2025 செவ்வாய் 08:15 | பார்வைகள் : 550


'பல்வேறு நபர்கள் இணைந்து குறித்த இளைஞனை அடித்துக்கொன்றதாக” முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளத.

நேற்று செப்டம்பர் 29 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை  Évry-Courcouronnes (Essonne)  தொடருந்து நிலையம் அருகே தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. RER தொடருந்து நிலையத்துக்கு வெளியே,., மாலை 5.30 மணி அளவில் கூடிய நபர்கள் சிலர், 18 வயதுடைய இளைஞன் ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குழுமோதல் இல்லை எனவும், மாறாக குழுவாகச் சேர்ந்து ஒருவரைத் தாக்கியுள்ளனர் எனவும், 91 ஆம் மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. குறித்த இளைஞன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருமணிநேர சிகிச்சையின் பின்னர், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்