Paristamil Navigation Paristamil advert login

காஸாவில் போர் நிறுத்தம் - ட்ரம்ப் புதிய முயற்சி! - மக்ரோன் பாராட்டு!!

காஸாவில் போர் நிறுத்தம் - ட்ரம்ப் புதிய முயற்சி! - மக்ரோன் பாராட்டு!!

30 புரட்டாசி 2025 செவ்வாய் 07:15 | பார்வைகள் : 427


காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தைக் கொண்டுவர 20 சாத்தியங்களைக் கொண்ட திட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த முயற்சியை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வாழ்த்தியுள்ளார்.

ட்ரம்ப் அறிவித்த இந்த திட்டமானது மிகவும் ஆழமான மற்றும் சிறந்த ஒரு திட்டம் என குறிப்பிட்ட மக்ரோன், ஹமாஸ் அமைப்பினர் இதனை ஏற்றுக்கொண்டு, பணயக்கைதிகளை விடுவித்து, இந்த திட்டத்தை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, "இஸ்ரேல் இந்த அடிப்படையில் உறுதியாக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.” எனவும் தெரிவித்தார்.

இந்த திட்டமானது கடந்த திங்கட்கிழமை பிரான்ஸ் தனது நட்பு நாடுகளோடு இணைந்து ஐ.நா மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இந்த திட்டத்தை அமெரிக்கா உருவாக்கியுள்ளது எனவும் மக்ரோன் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்