வங்க கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

30 புரட்டாசி 2025 செவ்வாய் 09:05 | பார்வைகள் : 136
வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நீலகிரி மாவட்டம் பந்தலுார் தாலுகா அலுவலகம் பகுதியில், நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, செருமுள்ளி, சேலம் மாவட்டம் ஏற்காடு, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை போன்ற இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல், இன்று ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக, மத்திய வங்கக் கடலில், வடக்கு அந்தமான் கடல் பகுதியில், நாளை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அக்., 5 வரை மிதமான மழை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1