கிளிநொச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிப்பு சம்பவம் – இருவர் படுகாயம்

29 புரட்டாசி 2025 திங்கள் 17:45 | பார்வைகள் : 155
கிளிநொச்சி – தட்டுவான்கொட்டியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 11:30 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1