Paristamil Navigation Paristamil advert login

விளம்பரம் இல்லாமல் Facebook, Instagram பார்க்கலாம் - Meta கொண்டுவரும் புது பிளான்

விளம்பரம் இல்லாமல் Facebook, Instagram பார்க்கலாம் - Meta கொண்டுவரும் புது பிளான்

28 புரட்டாசி 2025 ஞாயிறு 10:54 | பார்வைகள் : 128


பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா முறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

முதலில் இங்கிலாந்தில் அடுத்த சில வாரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.

சமீபத்திய இங்கிலாந்து ஒழுங்குமுறை வழிகாட்டுதலுக்கு இணைங்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில் மாதம் £2.99 மற்றும் iOS மற்றும் Android ஆப்களில் பயன்படுத்துவோருக்கு மாதம் £3.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ள

மேலும் Account Center இல் சேர்க்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கணக்கிற்கும் இணையத்தில் £2 , iOS/Android-இல் £3 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது.

இந்த நடைமுறை வருங்காலங்களில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்