தடைசெய்யப்பட்ட இணைய பந்தயத்தளம் - யுவராஜ் சிங்கிடம் விசாரணை
28 புரட்டாசி 2025 ஞாயிறு 10:54 | பார்வைகள் : 1056
தடைசெய்யப்பட்ட இணைய பந்தய தளமான 1xBet உடன் தொடர்புடைய பணமோசடி குறித்த விசாரணைக்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அமுலாக்க துறையில் முன்னிலையாகியுள்ளார்.
யுவராஜ் சிங், தனது சட்டக் குழுவுடன் மத்திய டெல்லியில் உள்ள அமுலாக்க துறை அலுவலகத்திற்கு மதியம் 12 மணியளவில் வருகைதந்து, இரவு 8 மணிக்கு முன்பு வெளியேறினார்.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் ரொபின் உத்தப்பா, நடிகர்களான மிமி சக்ரவர்த்தி மற்றும் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரிடம் இந்த விடயம் குறித்து அமுலாக்க துறை முன்பு விசாரணை நடத்தியது.
அத்துடன் நடிகர் சோனு சூட் இன்று புதன்கிழமை அமுலாக்கத்துறையில் முன்னிலையாக உள்ளார்.
1xBet உடன் தொடர்புடைய பிரபலங்களின் விளம்பர நடவடிக்கைகள், அவர்கள் எவ்வாறு தொடர்பு கொள்ளப்பட்டனர், பணம் செலுத்தும் முறை குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
அத்துடன் இந்த நடவடிக்கையின் கீழ் பெறப்பட்ட எந்தவொரு நிதியையும் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் இன் கீழ் "குற்ற வருமானம்" என வகைப்படுத்த முடியுமா என்பதை தீர்மானிப்பதை நோக்கமாகக் கொண்டும் அமுலாக்க துறை விசாரணை நடத்துகிறது.
இணையவழி சூதாட்டத்தை தடை செய்யும் சமீபத்திய சட்டத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றின் சட்ட பூர்வத்தன்மையையும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
1xBet மீதான அமுலாக்கத்துறையின் விசாரணை, இந்தியாவில் சட்டவிரோத இணையவழி பந்தய தளங்கள் மீதான பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் பயனர்களை ஏமாற்றி வரிகளை ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் அத்தகைய தளங்களுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் மற்றும் விளம்பர நடவடிக்கைகளை அமுலாக்க துறை ஆராய்ந்து வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan