இசை அமைப்பாளர் தேவாவிற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கெளரவம்!

27 புரட்டாசி 2025 சனி 15:15 | பார்வைகள் : 170
1990களில் பிசியான இசை அமைப்பாளராக இருந்தவர் தேவா. 400 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். இளையராஜா கிராமிய பாடல்களை சினிமாவிற்கு கொண்டு வந்தது போன்று சென்னையின் பாரம்பரிய இசையான கானா பாடல்களை சினிமாவுக்கு கொண்டு வந்தவர். தற்போது அவர் சில படங்களுக்கு இசை அமைத்தாலும் சினிமாவை விட்டு சற்று விலகியே இருக்கிறார். சமீபத்தில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம், தேவாவை அழைத்து பாராட்டி உள்ளது. அதில் முக்கியமாக ஆஸ்திரேலியா பார்லிமென்ட்டில் தேவாவுக்கு மிகப்பெரிய கவுரம் அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டின் அவைத்தலைவர் இருக்கையில் அமரவைக்கப்பட்டு அவருக்கு செங்ககோலும் வழங்கப்பட்டது. இது அந்த நாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகும்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்கு அளித்த மரியாதை பெருமை அளிக்கிறது. எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு கலைஞருக்கும் இது சொந்தம். எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தான் என் பலம். இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்'' என்றார்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1