திருமணம் பிடிக்காமல் ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்

27 புரட்டாசி 2025 சனி 15:23 | பார்வைகள் : 135
திருமண உறவு மீதான புரிதல் என்பது தற்போதைய இளம் தலைமுறயினருக்கு மாறிக்கொண்டே வருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் சமூகம் மற்றும் குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தத்தால் திருமண உறவில் நுழைகின்றனர். ஆர்வமின்றி திருமண உறவில் நுழைவதால்தான் என்னவோ அவர்களின் திருமணங்கள் விரைவில் முறிந்து விடுகிறது.
இளம் பெண்கள் திருமணம் செய்து கொள்ள குடும்ப அழுத்தங்களை அதிகம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு சமூகத்தில், வியட்நாமில் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தொழில் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த பெண்கள் திருமணங்களை தாமதப்படுத்த விரும்பியதால், வியட்நாமில் நாட்டில் இந்த ட்ரெண்ட் அதிகரித்துள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான நடைமுறை, குறிப்பாக சந்திர புத்தாண்டு போன்ற குடும்பக் கூட்டங்களின் போது, சிங்கிளாக இருப்பதால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில், பெண்கள் மத்தியில் இந்த முறை பிரபலமடைந்து வருகிறது.
ஏன் வியட்நாமில் பிரபலமடைந்து வருகிறது?
வியட்நாமில் உள்ள பல இளம் பெண்களுக்கு, தங்கள் தனிப்பட்ட விருப்பங்களையும் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளையும் சமநிலைப்படுத்துவது ஒரு சவாலாக உள்ளது. Nam Dinh-யைச் சேர்ந்த 30 வயதான மின் து, இந்த உளவியல் போராட்டத்திற்கு ஒரு உதாரணாமாக விளங்குகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளை தனது தொழில் வாழ்க்கைக்காக அர்ப்பணித்த பிறகு, சந்திர புத்தாண்டுக்காக அவர் காதலனை வீட்டிற்கு அழைத்து வருமாறு தனது பெற்றோரிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்தை அவர் எதிர்கொண்டார். இருப்பினும், அவரது பரபரப்பான வேலைப்பளுவால் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது கடினமாக மாறியது.
இந்த அழுத்தத்தின் காரணமாக, அவர் பல மில்லியன் வியட்நாமிய டாங் பணம் கொடுத்து, ஒரு ஆணை தனது தற்காலிக காதலனாக நியமித்தார். இதுகுறித்து அவர் கூறியது என்னவெனில் "அவர் என் வீட்டிற்கு வந்த நாளில், அவர் என் அம்மாவுக்கு சமைக்க உதவினார், என் உறவினர்களுடன் அரட்டை அடித்தார். என் பெற்றோர் என்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதை நான் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன," என்று South China Morning Post(SCMP) பேட்டியில் கூறினார். இதேபோல், மற்றொரு பெண்ணான கான் நோகோக் தனது பெற்றோரை சமாதானப்படுத்த ஒரு காதலனை வாடகைக்கு எடுத்தார், இது அவரது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்தது. "அப்போதிருந்து, என் பெற்றோருடனான எனது உறவு மேம்பட்டுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.
ஆண்களுக்கான தொழிலாக மாறியுள்ளது இந்த ட்ரெண்ட் பெண்களுக்கு மட்டும் தனிப்பட்ட தீர்வாக மட்டுமில்லை, மாறாக வியட்நாமில் பல ஆண்களுக்கு ஒரு தொழிலாகவும் உருவெடுத்துள்ளது. உதாரணமாக, 25 வயதான ஹுய் துவான், இதை முழுநேர வேலையாக மாற்றியுள்ளார், மேலும் சாதாரண சுற்றுலாக்கள் முதல் சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பக் கூட்டங்கள் வரை பல்வேறு வாடிக்கையாளர்களைச் சந்தித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய துவான் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதாக கூறியுள்ளார். "நான் ஜிம்மிற்குச் செல்ல வேண்டும், பாடக் கற்றுக்கொள்ள வேண்டும், சமைக்க வேண்டும், புகைப்படம் எடுக்க வேண்டும், மேலும் பல வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய எனது உரையாடல் திறன்களில் பணியாற்ற வேண்டும்," என்று அவர் பகிர்ந்து கொண்டார். தரமான சேவைகளை வழங்க, துவான் ஒவ்வொரு மாதமும் ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முன்பதிவுகளை வழங்குகிறார். உதாரணமாக, இரண்டு மணி நேர காபி டேட் அல்லது ஷாப்பிங் பயணத்திற்கு 100,000 முதல் 200,000 வியட்நாமிய டாங் (தோராயமாக சுமார் 10-20 அமெரிக்க டாலர்கள்) வரை வசூலிக்கிறார், அதே நேரத்தில் ஒரு குடும்பக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான விலை சுமார் 1 மில்லியன் வியட்நாமிய டாங் (40 அமெரிக்க டாலர்கள்) வரை கட்டணமாக வசூலிக்கிறார். இருப்பினும், துவான் கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறார், எந்தவொரு பாலியல் அல்லது உணர்ச்சிரீதியான தொடர்பையும் தடை செய்வதற்கான விதிமுறைகளை அவர் கொண்டுள்ளார், மேலும் அவரது சேவைகள் தற்காலிகமாகவும், தொழில்முறையாக மட்டுமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
இந்த ட்ரெண்டில் உள்ள பிரச்சினைகள்
ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுப்பதில் போக்கு பிரபலமடைந்து வரும் போதிலும், இதில் உள்ள உணர்ச்சி ஆபத்து குறித்து நிபுணர்கள் கவலைகளை எழுப்புகின்றனர். " இந்த உண்மை வெளிவந்தால், குடும்பங்கள் உணர்ச்சி சேதத்தை சந்திக்க நேரிடும் மற்றும் நம்பிக்கையை இழக்க நேரிடும்" என்று எச்சரிக்கின்றனர். மேலும் ஒரு துணையை வாடகைக்கு எடுப்பது வியட்நாமில் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்படவில்லை, எனவே பெண்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1