Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி!!

பரிஸ் : துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி!!

27 புரட்டாசி 2025 சனி 12:57 | பார்வைகள் : 3558


பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 27, இன்று சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Porte d'Aubervilliers  இற்கு அருகே உள்ள Émile-Bollaert வீதியில் வைத்து அதிகாலை 4 மணிக்கு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு 28 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததாகவும், மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தபோதும் அவரை உயிர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கியும், துப்பாக்கி சன்னங்கள் ஒரு தொகையும் கிடந்துள்ளன. விசாரணைகளை 19 ஆம் வட்டார காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்