இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் Hug My Younger Self

26 புரட்டாசி 2025 வெள்ளி 19:03 | பார்வைகள் : 138
கூகிள் ஜெமினியின் நானோ பனானா மூலம் AI புகைப்படங்கள் உருவாக்குவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
AI செயலிகளுக்கு prompt வழங்கினால், நாம் கேட்கும் படங்களை உருவாக்கி தருகிறது. இதில் நமது புகைப்படங்களையே உருமாற்றிக்கொள்ளலாம்.
தற்போது Google Gemini அறிமுகப்படுத்திய Nano Banana AI தொழில்நுட்பம், இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதன் மூலம், நெட்டிசன்கள் தங்களுக்கு விதவிதமான ஆடைகள் அணிந்து படங்களை உருவாக்கி கொள்கின்றனர்.
இதே போல், தங்களது சிறு வயது தோற்றத்தை கட்டிப்பிடிக்கும் Hug My Younger Self புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதனை எப்படி உருவாக்குவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கூகிள் ஜெமினி செயலிக்குள் நுழைந்து, அதில் உங்களது தற்போதைய புகைப்படம் மற்றும் குழந்தை பருவ புகைப்படம் ஆகிய இரண்டையையும் உள்ளிட்ட வேண்டும்.
கூகிள் ஜெமினி செயலிக்குள் நுழைந்து, அதில் உங்களது தற்போதைய புகைப்படம் மற்றும் குழந்தை பருவ புகைப்படம் ஆகிய இரண்டையையும் உள்ளிட்ட வேண்டும்.
அதன் பின்னர், "click a cute polaroid picture of my older self hugging my younger self" என்ற promptஐ உள்ளிட்டு, Click என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
சில வினாடிகளில், ஜெமினி நீங்கள் உங்கள் குழந்தை பருவ தோற்றத்தை கட்டிப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை உருவாக்கி கொடுக்கும்.
ஜெமினி உருவாக்கிய புகைப்படம் உங்களுக்கு திருப்திகரமாக இல்லையென்றால், redo என்பதை தேர்வு செய்தால், மீண்டும் புதிய புகைப்படத்தை உருவாக்கி தரும்.
அதேவேளையில், இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள், Morphing உள்ளிட்ட தவறான செயல்களுக்கு பிறரால் பயன்படுத்தப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.