மாதம்பட்டி ரங்கராஜ் கதையா 'இட்லி கடை' திரைப்படம்:?

26 புரட்டாசி 2025 வெள்ளி 15:32 | பார்வைகள் : 170
தனுஷ் நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில், பரவிய தகவலை, படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்ட தகவலும் உண்மை இல்லை என படக்குழு விளக்கமளித்துள்ளது.
'இட்லி கடை' திரைப்படத்தின் கதைக்களம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் பரவின. குறிப்பாக, இந்தப் படம் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்றும், இதனால் அவர் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், படக்குழு இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. "இட்லி கடை திரைப்படத்திற்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் வேறுபட்ட ஒரு கதை," என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வந்த செய்திகள் பொய்யானவை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
ஒரு சமையல் கலைஞர் குறித்து படம் எடுக்கப்பட்டால், அது மாதம்பட்டி ரங்கராஜின் கதையாகத்தான் இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த வதந்திகள் பரப்பப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.