ரோபோ ஷங்கரின் ஆசையை நிறைவேற்ற கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!

25 புரட்டாசி 2025 வியாழன் 13:25 | பார்வைகள் : 185
ரோபோ ஷங்கர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருந்த போதும், இதுவரை ஒரு படத்தில் கூட அவருடன் நடிக்கவில்லை. ஆனால் விஜய், அஜித், தனுஷ், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரோபோ ஷங்கரை தொடர்ந்து இவரின் ஒரே மகளான இந்திரஜா ஷங்கரும், விஜய் நடித்த 'பிகில்', கார்த்தி நடித்த 'விருமன்' போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாரும் எதிர்பாராத நேரத்தில், ரோபோ ஷங்கர் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், இவரின் கடைசி ஆசை பற்றி அவரது நண்பர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அதாவது ரோபோ ஷங்கருக்கு ஒரே ஒரு படத்திலாவது, கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஒரு வழியாக இதற்கான நேரம் கூடி வந்து, அதற்கான பேச்சு வார்த்தைகளும் சென்று கொண்டிருந்தது. ஆனால் ரோபோ ஆசை நிறைவேறுவதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டதால், அவரது கனவு நிறைவேறாமல் போனது.
இந்த நிலையில் தான் தன்னுடைய தீவிர ரசிகனான ரோபோ ஷங்கரின் கடைசி ஆசையை நிறைவேற்ற கமல் எடுத்துள்ள முடிவு பற்றி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. அதாவது கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்தில், ரோபோவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, ரோபோவின் மகள் இந்திரஜாவை ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். கமலின் இந்த முடிவை ரசிகர்கள் பலர் வியர்ந்து பாராட்டி வருகிறார்கள்.