NATO ஒருபடி மேலே ஒருபடி செல்லவேண்டும்! - ஜனாதிபதி மக்ரோன்!!

24 புரட்டாசி 2025 புதன் 23:03 | பார்வைகள் : 432
ரஷ்ய விமானங்களை தனியே சுட்டுவீழ்த்தாமல் NATO ஒருபடி மேலே செல்லவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தனது ட்ரோன்களை எல்லை மீறி NATO நாடுகளின் எல்லைகள் மீது பறக்கவிடுகிறது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய வான்வெளிகளில் ரஷ்யாவின் ட்ரோன்கள் பறந்த நிலையில், அவை சுட்டுவீழ்த்தப்பட்டன. “அதாவது உங்களை யாரேனும் தூண்டிவிட்டால், நீங்கள் மிகவும் கடுமையாக எதிர்வினையாற்றவேண்டும்!” என ஜனாதிபதி மக்ரோன் நியூயோர்க்கில் வைத்து தெரிவித்தார்.
நியூயோர்க்கில் வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் ஊடகவியலாளர்கள் “திரு.ஜனாதிபதி, நேட்டோ நாடுகள் தங்கள் வான்வெளியில் நுழையும் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தவேண்டும் என நினைக்கின்றீர்களா?!” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு “ஆம் நான் செய்வேன்!” என ட்ரம்ப் பதிலளித்திருந்தார். இந்த பதிலுக்கு எதிர்வினையாற்றும் நோக்கில், “ஒருபடி மேலே செல்லவேண்டும்!” என மக்ரோன் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.