அக்டோபர் 2-ம் தேதி வேலைநிறுத்தம் : தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு!!

24 புரட்டாசி 2025 புதன் 14:27 | பார்வைகள் : 555
பிரதமர் Sébastien Lecornuவை Matignonலில் சந்தித்து வெளியே வந்த தொழிற்சங்க கூட்டமைப்பு, வரும் அக்டோபர் 2-ம் தேதி மீண்டும் ஒரு நாடு தழுவிய போராட்ட நாளை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்த தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டியிருப்பதாக, CFDT பொதுச் செயலாளர் மரிலிஸ் லியோன் தெரிவித்துள்ளார். “இது ஒரு தவறான வாய்ப்பு. தொழிலாளர்கள் எதிர்பார்த்த எந்த தெளிவான பதிலும் பிரதமர் வழங்கவில்லை” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
அதேவேளை CGT பொதுச் செயலாளர் சோபி பினே கூறியதாவது: “பிரதமர் மாற்றமும் உறுதிப்பாடுகளும்’ பற்றி பேசினார். ஆனால் நடைமுறையில் எதுவும் இல்லை. வெறும் வார்த்தைகள் மட்டும் மாற்றம் ஆகாது” என்றார்.
கடந்த செப்டம்பர் 18-ம் தேதியிலான போராட்டம் வெற்றிகரமாக நடந்ததாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அந்நாளில் காவல்துறை கணக்குப்படி 5 லட்சம் பேர், தொழிற்சங்க கணக்குப்படி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.