Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐசிசி

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐசிசி

24 புரட்டாசி 2025 புதன் 12:21 | பார்வைகள் : 111


அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அமெரிக்க கிரிக்கெட் அணி, சமீப காலமாக வளர்ந்து வருகிறது. 2026 T20 உலகக்கோப்பைக்கான தகுதி சுற்று போட்டி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்றது.

இதில், லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்க அணி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற 2026 T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.


மேலும், 2028 ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா நடத்துகிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், அமெரிக்கா இடம் பெற வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் உறுப்பினர் தகுதியை இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசியின் நடைமுறைகளை பின்பற்ற தவறியது மற்றும் நிர்வாக அமைப்புகளை உருவாக்க தவறியதன் காரணமாக அமெரிக்காவை ஐசிசி உறுப்பினர் தகுதியை இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் குழுவிடம் இருந்து, தேசிய நிர்வாக அமைப்பு என்ற அங்கீகாரத்தை பெற தவறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ஐசிசி முன்வைத்துள்ளது.

இந்த இடைநீக்கம் காரணமாக, அமெரிக்க கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்கள் மற்றும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளது.


மேலும், இந்த இடைநீக்கம் அமலில் இருக்கும் வரை அமெரிக்க கிரிக்கெட் அணியை ஐசிசி நேரடியாக கவனிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை திடீரென அமுல்படுத்தப்படவில்லை. 2024 ஆம் ஆண்டில் ஜூலை மாதமே நிர்வாக அமைப்பை உருவாக்க ஐசிசி நோட்டீஸ் அனுப்பியது.

அமெரிக்கா கிரிக்கெட் வாரியம் ஐசிசியால் தடை செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.

2017 ஆம் ஆண்டில் நிர்வாகம் மற்றும் நிதி சிக்கல் காரணமாக ஐசிசி உறுப்பினர் பொறுப்பில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியது. பின்னர் மீண்டும், 2019 ஆம் ஆண்டில் உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்