இயல்பான ஒன்றாக மாறிய வீடியோ கேமிங்!!

23 புரட்டாசி 2025 செவ்வாய் 21:27 | பார்வைகள் : 365
2025ஆம் ஆண்டில் பிரான்சில் வீடியோ கேம்கள் விளையாடுவோரின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது. 76% பிரான்சியர்கள் வாரம் ஒருமுறை கேமிங் விளையாடுகிறார்கள். பெரியவர்கள் (88%) மற்றும் பெண்கள் (49%) ஆகியோரின் பங்களிப்பு அதிகரித்து, சராசரி வயது 40 ஆக உள்ளது. 16-30 வயதினரில் பெண்கள் 55% ஆக உள்ளனர், மேலும் 8 லட்சம் புதிய பெண்கள் கேமர்களாக 2025ல் சேர்ந்துள்ளனர்.
Médiamétrie ஆய்வின்படி, ஒரு வீரர் சராசரியாக 2.2 சாதனங்களில் கேமிங் விளையாடுகிறார்கள், குறிப்பாக ஸ்மார்ட்போன் மற்றும் கன்சோல் பயன்படுத்தப்படுகின்றனர். கேமிங் தற்போது பொழுதுபோக்கைத் தாண்டி ஒரு சமூக, கலாசார அடையாளமாக மாறியுள்ளது. 19-24 வயதினரில் 43% பேர் இந்தத் துறையில் தொழில்முறை வாய்ப்பு என கருதுகின்றனர்; குறிப்பாக 38% பெண்கள் இந்தத் துறையில் வேலை பார்க்க விரும்புகின்றனர்.