ஓஷானின் வேலைநீக்க திட்டம் செல்லாது: நிர்வாக நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

23 புரட்டாசி 2025 செவ்வாய் 20:27 | பார்வைகள் : 562
ஓஷான் நிறுவனத்தின் 2,389 வேலைநீக்கங்களை உள்ளடக்கிய வேலை பாதுகாப்பு திட்டத்தை, லில் நிர்வாக நீதிமன்றம் செல்லாததாக்கியுள்ளது. இந்தத் திட்டம் 2025 மார்சில் சில தொழிற்சங்கங்களுடன் கையெழுத்தாகியிருந்தாலும், CGT தொழிற்சங்கம், CSE மற்றும் சில ஊழியர்கள் நீதிமன்றத்தை அணுகினர்.
நீதிமன்றம் திட்டத்தில் நடைமுறைப் பிழை உள்ளது என்றும், குழுமத்தின் அனைத்து பிரிவுகளின் தொழிற்சங்க பிரதிநிதிகளும் ஒப்புதல் அளிக்க வேண்டியதாயிருந்ததாகவும் கூறியுள்ளது.
ஓஷான் குழுமம் இந்த முடிவுக்கு மேன்முறையீடு செய்துள்ளது. அவர்கள் திட்டம் 74% ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களால் ஒப்புதல் பெற்றதாகவும், வேலையிழப்பை தவிர்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளது. இது திட்ட தரத்தை நடைமுறையைப் பற்றிய நீதி வரும் எனவும், டூவை (Douai) மேன்முறையீட்டு நீதிமன்றம் மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.