மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி

23 புரட்டாசி 2025 செவ்வாய் 14:51 | பார்வைகள் : 183
நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. தமிழில், ‛திருமணம், மணியார் குடும்பம், தண்ணி வண்டி' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தையை வைத்து 'ராஜா கிளி' என்கிற படத்தையும் இயக்கினார். நடிகர் அர்ஜூனின் மருமகனும் கூட. உமாபதிக்கு ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆக இன்னும் சரியான வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார் உமாபதி. இந்த படத்தை துபாயை சேர்ந்த கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்நிறுவனம் ஜீவா, பிரபுதேவா, வடிவேலு, கவுதம் ராம் கார்த்திக் போன்ற நடிகர்களின் படங்களை தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.