நாளை உலகம் அழியுமா? பயத்தில் வேலையை விட்டு, சொத்துக்களை விற்ற மக்கள்

23 புரட்டாசி 2025 செவ்வாய் 10:16 | பார்வைகள் : 111
உலகம் அழியும் என்ற பயத்தில் மக்கள் சிலர் தங்கள் சொத்துக்களை விற்றுள்ளனர்.
உலகம் அழிய போகிறது என்ற கணிப்பை அவ்வப்போது ஆய்வாளர்கள், மத அறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கூறி வருகின்றனர். 2012, 2020 இல் அழியும் என கூறினார்கள் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
முன்னதாக 2012 ஆம் ஆண்டு உலகம் அழியும் என நம்பி பலரும் உயிரை மாய்த்து கொண்ட நிகழ்வுகள் கூட நடைபெற்றது.
தற்போது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மத போதகரான Joshua Mhlakela, 2025 செப்டம்பர் 23 - 24 திகதிகளில் பேரழிவு ஏற்படும். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து மனிதர்களை மீட்பார் என தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கணிப்பு, டிக்டொக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. #RaptureTok என்ற ஹாஸ்டேக்கில் பலரும் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.
வெகு சிலர் இயேசு தங்களை சொர்கத்துக்கு அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்து விட்டு, சொத்துக்களை விற்றுள்ளனர்.
Tilahun Desalegn என்ற நபர் தான் சொர்க்கத்திற்கு செல்ல உள்ளதால், தனது காரை விற்றுவிட்டதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.