"இரண்டு கொடிகள், ஒரு பாசாங்கு": மெலன்சோன் கண்டனம்!!

22 புரட்டாசி 2025 திங்கள் 20:10 | பார்வைகள் : 374
பிரான்சின் La France insoumise இயக்கத் தலைவர் ஜோன்-லூக் மெலன்சோன், பாரிஸ் மேயர் ஆன்ன் ஹிதால்கோ ஈபிள் கோபுரத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனின் கொடிகளை ஒளிப்படமாக காட்டியதைக் கடுமையாக விமர்சித்து, இது “முட்டாள்தனத்தில் அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
அவரும் அவரது கட்சியும், மக்களை அழிக்கும் இஸ்ரேலுடன் பாலஸ்தீனத்தை சமமாக நடத்துவது வெறும் பாசாங்காகும் என்றும், அது அமைதிக்கு வழி அல்ல, மறுபடியும் பாலஸ்தீனத்தை கொடுமைப்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சோசலிச் கட்சியின் தலைவர் ஒலிவியே போர், பாலஸ்தீனத்தை கட்சி ஆதரிப்பதை வலியுறுத்த, நகராட்சிகளில் பாலஸ்தீனக் கொடியை ஏற்றவேண்டும் என்றார் ஆனால் ஆன் ஹிதால்கோ உள்ளிட்ட சிலர் இரு கொடிகளையும் காட்டும் முடிவை எடுத்துள்ளனர். மெலன்சோன் இதையும் விமர்சித்து, போர் மக்கள் அழிப்புக்கு எதிரான பக்கம் இல்லை என்றும், அவரது செயல் கோழைத்தனம் மற்றும் அரசியல் பொய் என்றும் கூறியுள்ளார்.