நீஸ் விமான நிலையத்தில் விபத்திலிருந்து தப்பிய இரண்டு விமானங்கள்!!

22 புரட்டாசி 2025 திங்கள் 19:10 | பார்வைகள் : 345
நீஸ் விமான நிலையத்தில் ஞாயிறு இரவு ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டது. Nouvelair விமானம் தரையிறங்கும் போது தவறாக ஓடுபாதையை தேர்ந்தெடுத்து, நாஞ்சிற்குப் புறப்பட தயாராக இருந்த ஈஸிஜெட் விமானத்தை சுமார் 3 மீட்டர் தூரத்தில் கடந்து சென்றுள்ளது. இந்தச் சம்பவம் பயணிகள் மத்தியில் பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது; கேபினில் பெரிய சத்தமும் அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.
போக்குவரத்துத் துறை அமைச்சர் உடனடியாக விசாரணையை கோரியுள்ளார், மேலும் BEA அமைப்பு இதற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் விசாரணையை தொடங்கியுள்ளது. மூடுபனி காரணமாக விமானி ஓடுபாதையை தவறாக எடுத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. ஈஸிஜெட் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது, பயணிகள் மற்ற விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.