இட்லி கடை திரைப்படம் அன்னபூரணி படத்தின் கதையா ?

22 புரட்டாசி 2025 திங்கள் 17:39 | பார்வைகள் : 160
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். கடைசியாக குபேரா படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இப்போது இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி அடுத்தடுத்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு வெளியாக இருக்கிறது.
இட்லி கடை படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை அவர் தயாரிக்கவும் செய்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ஆர் பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, ராஜ்கிரண், வடிவுக்கரசி, பிரிகிடா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் நித்யா மேனன் இந்தப் படத்தில் நடித்துள்ளானர். மேலும், திருச்சிற்றம்பலம் படமான நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதே போன்று, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. இப்போது இந்த முறையும் தனுஷ் மற்றும் நித்யா மேனன் காம்பினேஷனில் உருவாகியிருக்கும் இட்லி கடை படமான சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக் கொடுக்கும் என்று தெரிகிறது. அந்தளவிற்கு இந்தப் படத்தில் நித்யா மேனன் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரை பார்க்கையில் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்த அன்னபூரணி படத்தைப் போன்று இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன் தாராவின் அன்னபூரணி படம் சமையல் கலையை மையப்படுத்தி தான் திரைக்கு வந்தது. அதுவும், நயன்தாரா சமைக்க கூடாது என்பதற்காக அவருக்கு எதிராக நடந்த சதியில் அவருக்கு சாப்பிடும் போது டேஸ்ட் தெரியாமல் போய்விடும். அப்படிப்பட்ட சூழலில் நடந்த போட்டியில் அவர் வெற்றி பெற்று தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்வார்.
அதே போன்று தான் இப்போது இட்லி கடை படமும் உருவாகி இருப்பதாக டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது. எனினும் படம் வெளியான பிறகு தான் படத்தின் காட்சிகள், கதைகள் வைத்து இது அன்னபூரணி படத்தின் தழுவலா அல்லது காப்பியா என்பதை சொல்லமுடியும். மணிக்கணக்காக கையில் அறைப்பதற்கு பதிலாக புதிதாக கிரைண்டர் வாங்கும் ஒரு காலகட்டத்தில் இட்லி கடை படம் நகர்கிறது. விறகு அடிப்பில் சமையல் செய்யும் ஒரு காலகட்டம்.
மெஷின் வைத்துக் கொண்டு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால், கை பக்குவம் என்ற ஒன்று இருக்கிறது அல்லவா அது தான் முக்கியம். இந்த சூழலில் கார்ப்பரேட் முதலாளியிடம் சென்று வேலைக்கு சேர்கிறார். அதன் பிறகு அங்கிருந்து மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து இட்லி அவிக்கிறார். அவருக்கு துணையாக நித்யா மேனனும் வருகிறார். இவர்களது காட்சியை பார்க்கும் போது லிங்கா படத்தில் ரஜினிகாந்த் மற்றும் சோனாக்ஷி சின்ஹா சமையல்கட்டுக்குள் சமையல் செய்யும் காட்சியை நினைவூட்டுகிறது.