Paristamil Navigation Paristamil advert login

9.30 மணிக்கு உரையாற்றுகிறார் மக்ரோன்! - நகரசபைகளில் பாலஸ்தீன கொடிகள் !!

9.30 மணிக்கு உரையாற்றுகிறார் மக்ரோன்! - நகரசபைகளில் பாலஸ்தீன கொடிகள் !!

22 புரட்டாசி 2025 திங்கள் 16:00 | பார்வைகள் : 619


இன்று செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் வைத்து பாலஸ்தீனதை பிரான்ஸ் அங்கீகரிக்கிறது.

இந்நிலையில், நாட்டில் உள்ள 34,875 நகரசபைகளில் 52 நகரசபைகள் இதனை வரவேற்று பாலஸ்தீன கொடிகளை பறக்கவிட்டுள்ளன.  நேற்று இரவு ஈஃபிள் கோபுரத்தில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருதன.  

இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதை அறிவிக்க உள்ளார். பிரான்ஸ் நேரம் இரவு 9.30 மணி அளவில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பட்டியலில் பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, கட்டார், சவுதி அரேபியா என பல நாடுகள் இணைந்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்