Paristamil Navigation Paristamil advert login

ராதிகாவின் தாயார் காலமானார்

ராதிகாவின் தாயார் காலமானார்

22 புரட்டாசி 2025 திங்கள் 15:39 | பார்வைகள் : 182


பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும் நடிகைகள் ராதிகா, நிரோஷா ஆகியோரின் தாயாருமான கீதா காலமானார்.

86 வயதான கீதா வயது மூப்பின் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்னைகளில் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக போயஸ்கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக, அரசியல் மற்றும் முக்கிய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இறுதிச் சடங்கு இன்று மாலை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்