சொர்க்கத்துக்கும் போய் அடங்காத ஆவிகள்....

22 புரட்டாசி 2025 திங்கள் 12:57 | பார்வைகள் : 104
நகைச்சுவை மக்களின் முகத்தில் சிரிப்பை கொண்டுவருவதால் அது பலருக்கும் பிடிக்கும். அப்படி நீங்கள் வாய்விட்டு சிரிக்க இந்த ஜோக்குகளை கொஞ்சம் நேரம் ஒதுக்கி படிக்கலாமே.
இறந்த பிறகு ஒருவன் சொர்க்க வாசலுக்கு செல்கிறான். அவன் போகும் வழியெல்லாம் கடிகாரங்கள் அதிகம் இருக்கிறது. வாசல் கதவை நெருங்கியதும் அங்கிருந்த தூதரை பார்த்து, எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா என்றான்.
தூதர்: கேளுங்கள்..
ஆவி: அது.. நான் வரும் வழியெல்லாம் கடிகாரங்கள் இருந்ததை பார்த்தேன். ஏன்?
தூதர்: மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு ஒரு கடிகாரம் இருக்கும். அவர்கள் செய்யும் தவறுகளை பொறுத்து நிமிட முள் நகரும்.
ஆவி: அப்படியா.. அப்போ என்னோட கடிகாரம் எங்கே இருக்கிறது..
தூதர்: அது சீலிங் ஃபேன் ஆக மாட்டியுள்ளோம்.
ஆவி: !!!
ஒரு பேருந்தில் பயணித்த மிகவும் அசிங்கமான 10 பேர் விபத்தில் இறந்து போகிறார்கள். அவர்கள் இறந்ததும் நேராக தூதரிடம் அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் தருகிறேன் என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள்.
முதல் ஆவி: நான் மிகவும் அழகாக மாற வேண்டும்.
தூதர்: அப்படியே நடக்கட்டும்.
2வது ஆவி: எனக்கும் அவரை போலவே அழகாக ஆக வேண்டும்.
தூதர்: அப்படியே நடக்கட்டும். அதை தொடர்ந்து வந்த பலரும் அதே போல அழகாக வேண்டும் என கேட்க, தூதரும் வரத்தை கொடுத்தார். கடைசி ஆள் இவர்களை பார்த்து பயங்கரமாக சிரித்தான். அதை பார்த்த தூதரோ இவன் கண்டிப்பாக அவன் வரத்தை பயன்படுத்திக்கொள்வான் என எண்ணினார். அவனிடம் உன் வரத்தை கேள் என்று சொன்னார்.
கடைசி ஆவி: இப்போ அழகாக மாறின எல்லோரும் பழைய மாதிரி அசிங்கமாக மாறனும்.
தூதர்: !!!