Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீனத்தில் தூதரகம்? - பணயக்கைதிகளை விடுவிக்க மக்ரோன் வலியுறுத்தல்!!

பாலஸ்தீனத்தில் தூதரகம்? - பணயக்கைதிகளை விடுவிக்க மக்ரோன் வலியுறுத்தல்!!

22 புரட்டாசி 2025 திங்கள் 07:09 | பார்வைகள் : 605


இன்று செப்டம்பர் 22  ஆம் திகதி திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது மாநாட்டில் வைத்து பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிக்க உள்ளார். அதில் பங்கேற்க அமெரிக்கா பயணமாகியுள்ள மக்ரோன், பணயக்கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.

காஸாவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பணயக்கைகளை ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக விடுவிக்கவேண்டும் என மக்ரோன் வலியுறுத்தினார். அத்தோடு பணயக்கைகளை விடுவித்தால் பாலஸ்தீனத்தில் ஒரு தூதரகம் ஒன்றை பிரான்ஸ் ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்தார்.

ஜெருசலேமில் ஒரு துணை தூரதரகம் உள்ளதையும், இஸ்ரேல் தலைநகர் Tel Aviv இல் ஒரு தூதரகம் இருப்பதையும் குறிப்பிட்ட மக்ரோன், காஸாவில் தூதரகம் அமைக்கப்பட மேற்படி நிபந்தனையை வலியுறுத்தினார்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க விதிக்கப்படும் நிபந்தனைகளில் எப்போதும் முதலில் இருப்பது பணயக்கைக்கைதிகளை விடுவிப்பதே ஆகும் எனவும் மக்ரோன் வலியுறுத்தினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்