அதிகாரம் ஒருவரின் சொத்தல்ல: கேப்ரியல் அத்தாலின் ஜனநாயக அழைப்பு!!

21 புரட்டாசி 2025 ஞாயிறு 18:54 | பார்வைகள் : 419
முன்னாள் பிரதமர் மற்றும் Renaissance இயக்கத் தலைவர் கேப்ரியெல் அதால், 'ஒரே மனிதர் அனைத்தையும் தீர்க்கக்கூடியவர்' என்ற நம்பிக்கையை விட வேண்டும் என்றும், அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் புதிய ஜனநாயக வழியை நாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர், மக்கள் வாக்கெடுப்புகள் வழியாக நிலையான மக்களின் பங்குபற்றலை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைத்தல், நிர்வாக அடுக்குகளை சுருக்குதல் மற்றும் சட்ட முறையீடுகளை மிதமாக்குதல் போன்ற அமைப்புசார் மாற்றங்களை அவர் முன்வைத்துள்ளார்.
அடுத்த 18 மாதங்களில் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் Renaissance ஈடுபடும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், சமூக முன்னேற்றங்களை பின்வாங்கும் எந்த விதமான சட்டமும் இயற்ற முடியாத வகையில், 'சமூக பின்னடைவுகளுக்கு எதிரான கொள்கை' அரசமைப்பில் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போதைய ஐந்தாவது குடியரசின் கட்டமைப்பில் மாற்றம் வேண்டாம் என்றும், குடியரசுத் தலைவர், நாடாளுமன்றம் மற்றும் அரசியல் சாசன நீதிமன்றத்தின் பங்கு தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திள்ளார்.