Paristamil Navigation Paristamil advert login

விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட 75 எலிகளில் 10 எலிகள் உயிரிழப்பு

விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட 75 எலிகளில் 10 எலிகள் உயிரிழப்பு

21 புரட்டாசி 2025 ஞாயிறு 18:49 | பார்வைகள் : 116


விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட 75 எலிகளில் 10 எலிகள் உயிரிழந்துள்ளது.

ரஷ்யா கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி, கஜகஸ்தானின் பைக்கோனூரில் இருந்து Bion-M 2 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

நீண்ட கால விண்வெளிப் பயணம் விலங்குகளின் உடலை எவ்வாறு பாதிக்கிறது, அண்ட கதிர்வீச்சு போன்ற நீண்டகால விளைவுகளிலிருந்து விண்வெளி வீரர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.


இந்த செயற்கை கோளில், 75 எலிகள், 1,500 பழ ஈக்கள், தானியங்கள், பருப்பு வகைகள், பூஞ்சை மற்றும் காளான் ஆகியவை அனுப்பப்பட்டன.

இந்த எலிகள் பல்வேறு குழுக்களாக பிரிக்கபட்டு, 25 பெட்டிகளில் அடைக்கப்பட்டன. இதில், ஒரு சில எலிகள் அதிக உணர்திறன் கொண்டதாக மரபணு மாற்றப்பட்டது. மற்ற எலிகளுக்கு, கதிர்வீச்சினால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

மேலும், பாரம்பரிய உணவு, உலர் உணவு மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட நீர் போன்ற வெவ்வேறு உணவுகளுடன் எலிகள்பல்வேறு துணை குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது, இந்த விண்கலம் வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியது. தரையிறங்கும் இடத்தில் உலர்ந்த புல்லில் சிறிய அளவில் தீ பற்றியது. ஆனால் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

இதனையடுத்து, விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட 75 எலிகளில், 65 எலிகள் மட்டுமே உயிருடன் திரும்பி வந்துள்ளன. 10 எலிகள் உயிரிழந்துள்ளன.

இது குறித்து பேசிய உயிரி மருத்துவப் பிரச்சினைகள் நிறுவனத்தின்(IBMP) இயக்குனர் ஓ.ஐ. ஓர்லோவ், "இந்த இறப்புகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால் இதற்கு காரணம் சுற்றுச்சூழல் அல்லது தொழில்நுட்ப தோல்விகள் இல்லை.

மாறாக ஆக்கிரமிப்பு ஆண் எலிகளின் குழுவிற்குள் ஏற்பட்ட மோதல்களால் தான் இறப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த எலிகளிடமிருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க தரவு ஆய்வுக்கு பங்களிக்கும்" என தெரிவித்துள்ளார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்