Paristamil Navigation Paristamil advert login

காசாவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டில் உயிரிழந்த குழந்தை

காசாவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டில்  உயிரிழந்த குழந்தை

21 புரட்டாசி 2025 ஞாயிறு 18:49 | பார்வைகள் : 208


இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர தாக்குதல் காரணமாக நாளுக்கு நாள் காசாவில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து வருகிறது.

காசாவின் மையப் பகுதியில் அதிகாலை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கர தாக்குதலில் குறைந்தது 46 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் தீவிர தாக்குதல் காரணமாக நாளுக்கு நாள் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் முறையான சிகிச்சையின்மை காரணமாக 3 வயது குழந்தை ஹபீபா அபு ஷார் உயிரிழந்துள்ளார்.


மேலும் இஸ்ரேலிய படைகளால் துரத்தியதால் காசா நகரின் பாதுகாப்பு தங்குமிடத்திலிருந்து தப்பியோடியதாக பாலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்-காசா போரில் இதுவரை குறைந்தது 65,283 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 166,575 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் இன்னும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்