சிறைச்சாலை அதிகாரிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை!!
.jpg)
20 புரட்டாசி 2025 சனி 20:42 | பார்வைகள் : 331
சிறைக்கைதிகளுக்கு போதைவஸ்துக்கள் விநியோகம் செய்த சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிவிக்கப்பட்டது.
Bois d'Arcy (Yvelines) சிறைச்சாலையில் பணிபுரியும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கைதிகளுக்கு குறித்த அதிகாரி போதைப்பொருளை அனுமதித்துள்ளார். அதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளார். விசாரணைகளில் இது தெரியவந்து குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு செப்டம்பர் 19, நேற்று வெள்ளிக்கிழமை ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதில் ஒன்றரை ஆண்டுகள் நீக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்கள், கஞ்சா போன்றவற்றை அவர் கடந்த ஜூன், ஜுலை மாதங்களில் விநியோகித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.