சைபர் தாக்குதல் அபாயத்தில் சர்வதேச விமான நிலையங்கள்!!
20 புரட்டாசி 2025 சனி 21:12 | பார்வைகள் : 1944
ஐரோப்பாவின் பல விமான நிலையங்கள் சமீபத்தில் ஹேக்கர்கள் நடத்தும் இணையத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. நல்வாய்ப்பாக Paris Orly மற்றும் Roissy-Charles-de-Gaulle விமான நிலையங்கள் தாக்குதலால் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், தாக்குதலின் செயற்பாட்டு முறைகள் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.விமான நிலையங்களின் மின்னணித் தரவுத்தளங்கள் மற்றும் பயணியர் சேவை அமைப்புகள் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டதால், பதிவு மற்றும் பயணச் சான்றுகள் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்பட்டது. பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்ததாவது, ஹேக்கர்கள் மிகுந்த சிரமம் இல்லாத, எளிய இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தியதாகும்.
இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விமான நிலையங்களின் இணையப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது அவசியமாகியுள்ளது. விமான நிலையங்கள் பெருமளவில் பயணியர் தகவல்கள் மற்றும் விமான சேவைத் தரவுகளை கையாளுவதால், அவை ஹேக்கர்களை ஈர்க்கும் இலக்காக மாறியுள்ளன. தகவல் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் விமான நிலைய நிர்வாகங்கள் உடனடியாக இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan