Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் சம்பவம் செய்த பூரன்! சூறையாடிய பொல்லார்ட், ரஸல்

மீண்டும் சம்பவம் செய்த பூரன்! சூறையாடிய பொல்லார்ட், ரஸல்

20 புரட்டாசி 2025 சனி 16:51 | பார்வைகள் : 114


செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடி அரைசதம் விளாசினார்.

கயானாவில் நடந்த CPL தொடரின் குவாலிபையர்-2 போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய ட்ரின்பாகோ அணியில் காலின் மன்ரோ (6) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.


அதன் பின்னர் வந்த அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன்(Nicholas Pooran) ருத்ர தாண்டவமாடினார். அவருடன் கைகோர்த்த அலெக்ஸ் ஹால்ஸும் (Alex Hales) அதிரடி காட்டினார்.

பூரன் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய கிரேன் பொல்லார்ட் (Kieron Pollard) 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 35 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து வந்த ஆந்த்ரே ரஸல் (Andre Russell) 12 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 28 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆக, ட்ரின்பாகோ 194 ஓட்டங்கள் குவித்து.

ஹால்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் அடங்கும்.

இதனைத் தொடர்ந்து ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களே எடுத்ததால், ட்ரின்பாகோ 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் (Tim Seifert) 40 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் விளாசினார். உஸ்மான் தாரிக் (Usman Tariq) 4 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்