கணைய பாதிப்புக்கான காரணங்கள் பற்றித் தெரியுமா ?

20 புரட்டாசி 2025 சனி 17:00 | பார்வைகள் : 189
மனித உடலில் வயிற்றுக்கு பின்னால் அமைந்திருக்கும் கணையம் செரிமானம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரண்டு விதமான சுரப்பியாக செயல்படுகிறது: செரிமானச் சுரப்பி மற்றும் உட்சுரப்பி.
கணையம், செரிமான சுரப்பியாக செயல்படும்போது, உணவை செரிக்க உதவும் என்சைம்களை உற்பத்தி செய்கிறது. இந்த என்சைம்கள் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளை உடைத்து, சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
கணையம், உட்சுரப்பியாக செயல்படும்போது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் மற்றும் குளுகோகான் போன்ற ஹார்மோன்களைச் சுரக்கிறது. கணையத்தில் உள்ள லாங்கர்ஹான்ஸ் என்ற பகுதியில் இருக்கும் சிறப்பு செல்கள், உடலில் சர்க்கரையின் சமநிலையைப் பராமரிக்க இன்சுலினை உற்பத்தி செய்கின்றன.
அளவுக்கு அதிகமான மது அருந்துதல், பித்தப்பையில் கற்கள் உருவாகி, கணையத்திலிருந்து செரிமான திரவம் வெளியேறும் பாதையை தடுப்பது, கணையத்தில் ஏற்படும் வீக்கம் ஆகியவை கணைய பாதிப்புக்கு சில காரணங்கள் ஆகும். இந்த காரணங்கள் கணையத்தின் செயல்பாட்டை பாதித்து, ஒட்டுமொத்த உடல்நலத்தையும் சீர்குலைக்கலாம்.