கொழும்பு புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து

20 புரட்டாசி 2025 சனி 15:35 | பார்வைகள் : 147
கொழும்பு புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - புறக்கோட்டை, மெலிபன் வீதியில் இன்று மாலை பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள அலங்கார மின்விளக்கு கடையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதி முழுதும் புகைமண்டலமாக காட்சியளிக்கின்றன.
மேலும், தியணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளன.
குறித்த தீ விபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.