”பிரெஞ்சு யூதர்களின் கவலைகள் எனக்குத் தெரியும்!” - மக்ரோன் விளாசல்!!

20 புரட்டாசி 2025 சனி 16:12 | பார்வைகள் : 568
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக ஜனாதிபதி மக்ரோன் அறிவித்ததில் இருந்து, யூதர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. யூத விரோத கருத்துக்கள் மடைமாற்றப்பட்டு திரிபுபடுத்தி சொல்லப்படுவதாக மக்ரோன் குற்றம் சாட்டியுள்ளார்.
”யூத விரோத கருத்துக்கள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றன. எனக்கு பிரெஞ்சு யூதர்களின் கவலைகள் நன்கு தெரியும். அவர்களது நீதி மற்றும் பாதுகாப்பை நான் உறுதி செய்வேன் என மக்ரோன் தெரிவித்தார். “யூத விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது இரண்டு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,. அவர்கள் உறுதியாக கண்டறியவும், , உடனடி பதிலதாக தண்டிக்கவும்படுவார்கள்!” என மக்ரோன் உறுதியளித்தார்.
”ஒக்டோபர் 7 ஆம் திகதியின் பின்னர் அவர்களது (யூதர்களது) வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்பதை நான் அறிவேன். யூத வெறுப்புக்கு எதிராக குடியரது எப்போதும் அணிதிரளும்” எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.