Paristamil Navigation Paristamil advert login

65 ஆயிரம் யூரோ மதிப்பிலான கேபிள்கள் திருட்டு – 27 வயதான இளைஞருக்கு சிறை!!

65 ஆயிரம் யூரோ மதிப்பிலான கேபிள்கள் திருட்டு – 27 வயதான இளைஞருக்கு சிறை!!

19 புரட்டாசி 2025 வெள்ளி 18:53 | பார்வைகள் : 423


Seine et marne பகுதியில் தொலைபேசி கேபிள் திருட்டு வழக்கில் காவல்துறையினர் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். Achères-la-Forêt  பகுதியில் 600 மீட்டர் கேபிள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், Cannes-Écluse பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.3 டன் வெண்கல கேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பெறுமதி 65 ஆயிரம் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 27 வயதான ஜினோ என்ற நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். பெரும்பாலான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தாலும், நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட Orange நிறுவனம் சார்பாக 22,000 யூரோவுக்கும் மேற்பட்ட இழப்பீடு தொகையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்