Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்துக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்

சுவிட்சர்லாந்துக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்

19 புரட்டாசி 2025 வெள்ளி 18:35 | பார்வைகள் : 787


அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், சுவிட்சர்லாந்துக்கான தூதராக பெண்ணொருவரை நியமித்துள்ளார்.

சுவிட்சர்லாந்துக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் பெயர், காலிஸ்டா கிங்ரிச் (Callista Gingrich).

காலிஸ்டா, தந்தை வழியில் போலந்து பின்னணியும், தாய் வழியில் சுவிஸ் பின்னணியும் கொண்டவர் ஆவார்.

பல்வேறு விருதுகள் பெற்ற காலிஸ்டா, கத்தோலிக்க திருச்சபையின் தலைமை அமைப்பான Holy See என்னும் அமைப்பிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றியவர் ஆவார்.

காலிஸ்டாவின் கணவரான Newt Gingrich, 1995 முதல் 1999வரை, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்