மிரள வைக்கும் பாம்பு தீவு.....?
19 புரட்டாசி 2025 வெள்ளி 18:35 | பார்வைகள் : 1091
பிரேசிலின் இல்ஹா டா குயிமாடா கிராண்டே (Ilha da Queimada Grande) பாம்புத் தீவு என்று அறியப்படுகிறது.
43 ஹெக்டர் பரப்பளவைக்கொண்ட அந்தத் தீவு பிரேசிலின் கரைக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்தத் தீவுக்குள் செல்ல மனிதர்களுக்கு அனுமதி இல்லை.
குடிநீர், மருத்துவச் சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு கிடையாது. சிறப்பு அனுமதி பெற்ற சில அறிவியலாளர்கள் மட்டுமே அங்கு செல்லலாம். அவர்கள் மருத்துவப் பொருள்களையும் பாதுகாப்புச் சாதனங்களையும் எடுத்துச் செல்வதுண்டு.
இந்த தீவில் சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக கோல்டன் லான்ஸ்ஹேட் வைப்பர் (Golden lancehead viper) என்ற பாம்பு அங்கு மட்டுமே இயற்கையாகக் காணப்படுகிறது.
Golden lancehead viper கொத்தினால் சிறுநீரகம் செயலிழக்கலாம், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.
எனினும் அந்தப் பாம்பின் நஞ்சில் உயிர்காக்கும் மருத்துவ குணம் இருக்கிறதா என்று அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan