Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., ஆட்சியில் பங்கு வேண்டும்: காங்., கோஷத்திற்கு பெருகும் ஆதரவு

தி.மு.க., ஆட்சியில் பங்கு வேண்டும்: காங்., கோஷத்திற்கு பெருகும் ஆதரவு

19 புரட்டாசி 2025 வெள்ளி 12:05 | பார்வைகள் : 146


சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமாரை தொடர்ந்து, முன்னாள் மாநில தலைவர் அழகிரியும், ஆட்சியில் பங்கு கோரிக்கையை வரவேற்றுள்ளார்.

ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு' என்ற கோஷத்தை, தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்முறையாக எழுப்பினார். தமிழக காங்கிரஸ் கட்சியில் அது தொடர்ந்து ஒலித்து வருகிறது.

அக்கட்சியின் சட்டசபை குழு தலைவராக உள்ள ராஜேஷ்குமார், 'ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக தொகுதிகள் வேண்டும்' என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அவரை தொடர்ந்து, தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமாரும், அதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்.

சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி, 'கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடைத்தால், காங்கிரஸ் கட்சி அதை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும்' என்றார்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி கூறியதாவது:

தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 125 தொகுதிகளில் கவனம் செலுத்த உத்தரவு போட்டு உள்ளார்.

சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமாரும், ஆட்சியில் பங்கு, அதிக இடங்களை பெற வேண்டும் என்கிறார். தமிழக காங்கிரசாரின் உணர்வுகளை நடைமுறைப்படுத்த, நானும் டில்லி மேலிடத்தில் எடுத்து சொல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கோவையில் அளித்த பேட்டியில், ''தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் ஆகியோர் எங்களிடம் எதுவும் கூறவில்லை,'' என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்