Paristamil Navigation Paristamil advert login

புதிய இராஜதந்திர சவாலை ஏற்படுத்தியுள்ள சவுதி - பாகிஸ்தானுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம்

புதிய இராஜதந்திர சவாலை ஏற்படுத்தியுள்ள சவுதி - பாகிஸ்தானுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம்

18 புரட்டாசி 2025 வியாழன் 20:18 | பார்வைகள் : 211


பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியாவை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பிராந்திய அரசியலில் புதிய தாக்கங்களை ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பாதுகாப்பையும் ஒன்றிணைத்து, பரஸ்பர பாதுகாப்பு உறுதிமொழியை வழங்குகிறது.

இதன் மூலம், ஒரு நாடுகளும் தாக்கப்படும்போது, ஏனைய நாடும் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் முதலில் கத்தாருக்கும்இ பின்னர் சவுதி அரேபியாவிற்கும் விஜயம் மேற்கொண்டது, பிராந்தியத்தில் பாகிஸ்தானின் அதிகரித்துவரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

இந்த ஒப்பந்தம், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளையும் இணைத்து நேட்டோ போன்ற ஒரு இராணுவக் கூட்டணியை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

இந்த ஒப்பந்தத்தின் காரணமாக, இனி பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், சவுதி அரேபியாவும் பதிலடி கொடுக்க நேரிடும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு புதிய இராஜதந்திர மற்றும் இராணுவ சவாலை முன்வைக்கிறது.

 

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உடன் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர்கள் சவுதிக்கு விஜயம் மேற்கொண்டது, இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தையும், பாகிஸ்தான் அதற்கு அளிக்கும் முன்னுரிமையையும் வெளிப்படுத்தியுள்ளது.

 

 

இந்த பாதுகாப்பு ஒப்பந்தம்இ மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள அதிகார சமநிலையை மாற்றி அமைக்கும் ஒரு முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்