பிரித்தானியாவில் 3 ரஷ்ய உளவாளிகள் கைது

18 புரட்டாசி 2025 வியாழன் 20:18 | பார்வைகள் : 164
பிரித்தானியாவில் ரஷ்ய உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவிற்காக உளவு வேலையில் ஈடுபட்ட மூன்று பேர் சந்தேகத்தின் அடிப்படையில் பிரித்தானியாவின் எசெக்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை பெருநகர பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியது தொடர்பாக நடந்த விசாரணையில் இந்த கைது நடவடிக்கை நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களின் இரண்டு வீடுகளிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் பிரித்தானியாவில் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்புகளால் இந்த நபர்கள் பினாமிகளாக அமர்த்தப்படுகின்றனர் என்றும் இந்த எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் டொமினிக் மர்பி குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.