வேலை நிறுத்தம்! - போக்குவரத்து தடை விபரங்கள்! - மூடப்படும் மெற்றோ நிலையங்கள்!

18 புரட்டாசி 2025 வியாழன் 08:45 | பார்வைகள் : 987
செப்டம்பர் 18, இன்று வியாழக்கிழமை பல்வேறு பொதுப்பணித்துறைகளில் வேலை நிறுத்தம் இடம்பெற்று வருகிறது. பொது போக்குவரத்துக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்படும் போக்குவரத்துக்கள் தொடர்பான முழுமையான தகவல்களை தொகுக்கிறது இந்த பதிவு.
Bastille , Concorde , Arts et Métiers , Villiers , Opéra , République , Trocadéro , Sèvres Babylone , Invalides மற்றும் Place de Clichy ஆகிய மெற்றோ நிலையங்கள் முழுமையாக மூடப்பட உள்ளன.
மெற்றோக்களில் தானியங்கி சேவைகளான 1, 4 மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் தங்கு தடையின்றி பயணிக்கும்.
7 ஆம் மற்றும் 9 ஆம் இலக்க மெற்றோக்களில் மூன்றில் ஒரு சேவை மட்டுமே இயங்கும்,
10 ஆம் மற்றும் 13 ஆம் இலக்க மெற்றோக்களில் நெருக்கடியான வேலை நேரங்களில் நான்கில் ஒரு சேவை மட்டும் இயங்கும்,
ஏனைய மெற்றோக்கள் தாமதங்களையும், ஒரு சில தடைகளையும் சந்திக்கும்.
***********
RER A சேவைகள் நெருக்கடியான வேலை நேரத்தில் மூன்றில் இரண்டும், RER B சேவைகளில் 50% சதவீதமான சேவைகள் மட்டுமே இயங்கும்,. Gare du Nord இடை இணைப்பு செயற்படும்.
RER C மூன்றில் ஒன்றும்
RER E சேவைகள் இரண்டில் ஒன்றும்.
******
Transillien சேவைகளில் சராசரியாக மூன்றில் இரண்டும் இயங்கும்,
N, R மற்றும் U வழிச் சேவைகள் மட்டும் இரண்டில் ஒன்று இயங்கும்,
***********
ட்ராம் சேவைகளில் T5 நான்கில் மூன்றும் T7 சேவைகளில் இரண்டில் ஒன்றும் இயங்கும். ஏனைய சேவைகள் வழமை போல் இயங்கும்.
*****
பேருந்துகளில் 70% சதவீதமானவை வழமை போல் இயங்கும்.