மஸ்ரூம் சுக்கா!

12 ஐப்பசி 2025 ஞாயிறு 18:11 | பார்வைகள் : 111
சிக்கன் மட்டன் சுக்கா இவற்றையெல்லாம் நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் சைவத்தில் செய்யக்கூடிய செட்டிநாடு மஸ்ரூம் சுக்காவை சாப்பிட்டு பார்த்து இருக்கீங்களா. அதுவும் ஹோட்டலில் செய்யக்கூடிய கைப்பக்குவத்தை போல் வீட்டிலேயே அற்புதமான முறையில் செட்டிநாடு மஸ்ரூம் சுக்காவை எப்படி செய்யலாம் என்பதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் முழுமையாக தெரிந்து கொள்வோமா. ?
இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால், மஷ்ரூம் 200 கிராம், வெங்காயம் 2, தக்காளி 1, பச்சைமிளகாய் 2, இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் & டீஸ்பூன் மல்லித்தூள் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் கொத்தமல்லி விதை 1 டேபிள் ஸ்பூன், சோம்பு 1 டீஸ்பூன், மிளகு 1/2 டீஸ்பூன், சீரகம் 1/2டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, கிராம்பு 2, இலவங்கப்பட்டை சிறிய துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் இவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து அரைநெல்லிக்காய் அளவுக்கு கொரகொரப்பான விழுதாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கடாயில் பச்சைமிளகாய், கறிவேப்பிலை , எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். நன்கு பொன்னிறமாக வந்த பிறகு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து, வெட்டி வைத்த மஷ்ரூம் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக மென்மையாக வரும் வரை மதக்க வேண்டும்.
பின்பு, அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து 57 நிமிடம் வேகவிட வேண்டும். இறுதியில் அதிக தீயில் வறுத்து 'சுக்கா" மாதிரி தண்ணீர் இல்லாமல் இறக்கவும். மேலே கொத்தமல்லி இலை தூவினால் சுவையான செட்டிநாடு மஷ்ரூம் சுக்கா தயார். சிக்கன் சுக்காவை போல சைவத்தில் செய்யப்படும் இந்த செட்டிநாடு மஸ்ரூம் சுக்காவை சப்பாத்தியில் இருந்து சாம்பார் சாதம் ஆகியவற்றின் சேர்த்து சாப்பிடும் பொழுது அவ்வளவு சுவையாக இருக்கும்.