இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு பூட்டு! - நிராகரித்தது நீதிமன்று!!

12 ஐப்பசி 2025 ஞாயிறு 14:52 | பார்வைகள் : 439
இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றினை மூடுவதற்கு காவல்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
Marseille (Bouches-du-Rhône) நகரில் உள்ள “mosquée des Bleuets” எனும் இஸ்லாமிய பள்ளிவாசலை மூடுவதற்குரிய கோரிக்கை விடுக்கப்பட்டது. அங்குள்ள இமாம் (இஸ்லாமிய மதகுரு) மிகவும் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர் எனவும், அவர் சிறுவர்களுக்கு அடிப்படைவாதத்தை புகட்டுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டு அவர் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அடுத்த இரண்டு மாதங்களுக்கு குறித்த பள்ளிவாசலை மூடுவற்குரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என மார்செய் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் ‘பள்ளிவாசல் மூடுவதை’ தடுத்துள்ளது. பள்ளிவாசலை மூடாமல் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
தொழுவதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.