Paristamil Navigation Paristamil advert login

Cryptocurrencyயால் நேர்ந்த கதி - யாழ் இளைஞனின் விபரீத முடிவு

Cryptocurrencyயால் நேர்ந்த கதி - யாழ் இளைஞனின் விபரீத முடிவு

12 ஐப்பசி 2025 ஞாயிறு 11:18 | பார்வைகள் : 782


யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இணைய (Cryptocurrency) வர்த்தகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தால் , அவ்விளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியை சேர்ந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது சுகாதார சேவை முகாமைத்துவ உத்தியோகஸ்தரான தங்கராசா ராஜ்குமார் (வயது 30) எனும் இளைஞனே உயிர் மாய்த்துள்ளார்.

குறித்த நபர் Cryptocurrency வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து இருந்ததாகவும் , குறித்த வர்த்தக நடவடிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டதால் மன விரக்தியில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக மரணச விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் முதலீடு செய்த பணத்தில் பெரும் தொகை பணம் கடனாக பெற்ற பணம் எனவும் , வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டமையால் கடன் பணத்தினை மீளளிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக கடும் மனவுளைச்சலில் இருந்ததாகவும் அதனாலயே உயிரை மாய்த்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது 

வர்த்தக‌ விளம்பரங்கள்